புதுடெல்லி:
ஜெர்மனியின் சார்புருக்கென் நகரில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பி.வி.சிந்துவும், தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும் டென்மார்க் வீராங்கனையுமான லைன் ஹாஜ்மார்க் ஜேயர்ஸ்பெல்ட்டும் மோதினர்.
இதில் சிந்து 21-12, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். ஜூலை மாதம் நடைபெற்ற ஜப்பான் ஓபனுக்குப் பிறகு அவர் வெல்லும் சாம்பியன் பட்டமாகும் இது.