2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

தனுசு

தலைமைப்பதவி தேடி வரும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் 9ம் இடத்தில் கேதுவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். அரசு உத்தியோக வாய்ப்பு உறுதி. சிலருக்கு கவுரவப் பதவி, தலைமைப் பதவிகள் கிடைக்கும். தொழிலில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வீர்கள்.

ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும். புதிய பெரிய மனிதர்களின் நட்பால் அந்தஸ்து உயரும். தன ஸ்தானம் வலுப் பெறுவதால் நல்ல பொருளாதார அனுகூலம் கிடைக்கும். பணச் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

பெண்களுக்கு தாய் வழி தீபாவளி சீர் வந்து சேரும். திரைக் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் நல்ல வரமாக அமையும். திருமணத்தடை அகலும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கோப உணர்வு குறைந்து விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகமாகும். 3.11.2026 அன்று அதிகாலை 3.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். நினைப்பதை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமங்கலி பெண்களுக்கு தான தர்மம் வழங்கவும்.

மகரம்

ஆரவாரமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோக நிலையில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கூட்டுத் தொழில் சிறப்படையும்.

பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். அலுவலகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை விஷயத்தில் நல்லவை நடைபெறும். தம்பதிகளிடம் நெருக்கம் கூடும். காதல் துளிர்க்கும்.

பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் விரைவில் நீங்கும். கடன்கள் படிப்படியாக குறையும். தன் நம்பிக்கை தைரியம் கூடும் அஷ்டம ஸ்தானத்தில் அதிசார குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.

3.11.2026 அன்று அதிகாலை 3.46 முதல் 5.11.2026 காலை 9.34 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளிநாட்டுப் பயணம், சொத்துக்கள் மீதான பத்திரப் பதிவு ஒத்திப்போகலாம். பணம் கொடுக்கல், வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

குடும்ப நிர்வாகச் செலவு மற்றும் உறவுகளின் இல்ல சுபச் செலவு என செலவுகளின் பட்டியல் கூடும். வயது முதிர்ந்தவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான தான தர்மம் வழங்கவும்.

கும்பம்

அனுகூலமான வாரம். ராசியில் உள்ள ராகு பகவான் வெகு விரைவில் ராசியை விட்டு வெளியேறப் போகிறார். ராசிக்கு அதிசார குருவின் பார்வை உள்ளது.

ஏழரைச் சனியின் ஆதிக்கம் குறையும். கோட்சார கிரகநிலை மெதுமெதுவாக மாறிக்கொண்டு வருவதால் வெகு விரைவில் நிலைமை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் காரிய சித்தி உண்டாகும்.

போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். தாய், தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும். உயர் கல்வியில் இருந்த தடை தாமதம் விலகும்.

பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும். விருந்தினர் வருகை வீட்டை கலகலப்பாக்கும். தொழிலாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து அதனை தீர்க்க முயல்வது நிறுவனத்தை வளரச் செய்யும்.

5.11.2026 காலை 9.34 முதல் 7.11.2026 அன்று மாலை 5.15 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நண்பர்களுக்காக கடன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். உணவால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். தூய்மை பணியாளர்களின் தேவை அறிந்து தீபாவளி தானம் வழங்கவும்.

மீனம்

சாதகமும் பாதகமும் கலந்த வாரம். ராசி அதிபதி குரு பகவான் ராசிக்கு 6ல் கேதுவுடன் சேர்க்கை பெறுகிறார்.

வருமானம் ஒரு வழியில் வந்தால் செலவுகள் பல வகைகளில் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் சற்று காலதாமதமாகும். சொத்துக்கள் வாங்கும் முன்பு பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம்.

காதல் திருமணம் தடைபடும். சிலர் தவணை முறைத் திட்டத்தில் புதிய வாகனம், நிலம் வாங்கலாம். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டு. தொழிலை மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும்.

தொழிலில் போட்டி பொறாமைகளை சமாளிக்கப் பழக வேண்டும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கடுமையாக உழைக்க நேரும். திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் வெற்றி வாகை சூடுவீர்கள்.

சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். 7.11.2026 அன்று மாலை 5.15 க்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உஷ்ண நோய் தாக்கம் இருக்கும் என்பதால் காரமான உணவைத் தவிர்க்கவும்.

தம்பதிகளிடையே அவ்வப்போது வாக்குவாதம் தோன்றி மறையும். சாலையோரம் வசிப்பவர்களுக்கு தீபாவளி பட்சணங்கள் தானம் வழங்கவும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *