மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்!!

மேஷம்

அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக முடியும்.

ரிஷபம்

நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். பொருளாதாரத்தில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

மிதுனம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக்கொள்வது நல்லது. சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பணிபுரியுமிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கடகம்

நினைத்தது நிறைவேறும் நாள். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவீர்கள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

சிம்மம்

திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.

கன்னி

ஆதாயம் அதிகரிக்கும் நாள். இல்லத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

துலாம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சியில் தாமதம் ஏற்படும். குடும்பத்தினர்கள் உங்களின் செயல்பாட்டில் குறை கண்டு பிடிப்பர்.

விருச்சிகம்

நினைத்தது நிறைவேறும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

தனுசு

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். பயணங்களில் கவனம் தேவை.

மகரம்

லாபகரமான நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு திருப்தி தரும்.

கும்பம்

பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படலாம்.

மீனம்

பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் நேர்மைக்குப் பாராட்டுக் கிடைக்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *