ஹாங்​காங்​கில் நடை​பெற்று வந்த ஹாங்​காங் சிக்சஸ் கிரிக்​கெட் போட்​டி​யில் ஆப்​கானிஸ்​தான் அணி 4 விக்கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றியது!!

ஹாங்​காங்:
ஹாங்​காங்​கில் நடை​பெற்று வந்த ஹாங்​காங் சிக்சஸ் கிரிக்​கெட் போட்​டி​யில் ஆப்​கானிஸ்​தான் அணி 4 விக்கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றியது.

ஹாங்​காங்​கிலுள்ள மாங் காக் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இறுதிப் போட்​டி​யில் ஆஸ்திரேலியா​வும், ஆப்கானிஸ்தானும் மோதின.

முதலில் விளை​யாடிய ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்​புக்கு 115 ரன்​கள் குவித்​தது. பின்​னர் 116 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய ஆப்​கானிஸ்​தான் அணி 5.1 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 119 ரன்​கள் விளாசி 4 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டது.

அந்த அணி​யின் கரீம் ஜனத் 13, குல்​ப​தீன் நயீப் 17, பர​மானுல்லா சஃபி 26, இம்​ரான் மிர் 53(14 பந்​துகள், 2 பவுண்​டரி, 7 சிக்​ஸர்) ரன்​களை விளாசி அணியை வெற்றி பெறச் செய்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *