ராம்சரண் மற்றும் ‘புஷ்பா’ பட இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் ‘RC17’ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் தொடங்கியது!!

ஹைதராபாத்:
ராம்சரண் மற்றும் ‘புஷ்பா’ பட இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் ‘RC17’ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, முதல் கிளாப் அடித்துப் படத்தைத் தொடங்கி வைத்தார்.

2018-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ரங்கஸ்தலம்’ படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ரங்கஸ்தலம்’ படம் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தொடக்க விழாவைத் தொடர்ந்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள ப்ரீ-லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

ராம்சரண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டரைப் பகிர்ந்து, சுகுமாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், இந்தத் பயணம் மிகவும் சிறப்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தை சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் சுகுமாரும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்மேனியும், டி-சீரிஸ் சார்பில் பூஷன் குமாரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

முன்னதாக, சுகுமார் தயாரிப்பில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள ’பெத்தி’ திரைப்படத்தில் சிவராஜ்குமார், ஜான்வி கபூர், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர் என்பது .

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் முழுவீச்சில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *