திருமண புகைப்படத்தை பகிர்ந்தார் அனிருத்!!

இசையமைப்பாளர் அனிருத், சன் ரைசரஸ் அணியின் இணை உரிமையாளர் கவ்யா மாறன் திருமணம் இன்று (நவ.11) கிரீஸில் நடந்தது.

அனிருத் – காவ்யா மாறன் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்ற நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நவ.21-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத் திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர்.

திருமணத்துக்கு பின்பு முதல் புகைப்படத்தை அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “என் வாழ்வில் ஒரு முறை மட்டும் வரும், வாழ்நாள் முழுவதுக்குமான தருணம். 11.11” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அந்தப் படத்தில் அனிருத் தந்த நிறத்தில், வேஷ்டியும் அதற்கு பொருத்தமான குர்தாவும் அணிந்து பாரம்பரிய உடையில் காணப்படுகிறார்.

காவ்யா மாறன், முழுமையான எம்பிராய்டரி, நுணுக்கமான சீக்வின் வேலைப்பாடுகள் உள்ள இளஞ்சிவப்பு நிற லெஹங்காவும் அதற்கு பொருத்தமான ப்ளவுஸ் அணிந்துள்ளார்.

அனிருத் – காவ்யா மாறன் திருமண கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இவர்கள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கிளம்பிச் சென்ற படங்கள் சமீபத்தில் வைரலானது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *