கிரீஸில் விமரிசையாக நடந்த அனிருத் – காவ்யா மாறன் திருமணம் ; மு.க.ஸ்டாலின், ரஜி​னிகாந்த் நேரில் வாழ்த்து!!

இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தருக்​கும், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் கிரிக்​கெட் அணி​யின் இணை உரிமையாளரான காவ்யா மாறனுக்​கும் கிரீஸ் நாட்​டில் நேற்று திரு​மணம் நடைபெற்றது.

தமிழ் திரை​யுல​கின் முன்​னணி இசையமைப்​பாளர்​களுள் ஒருவரான அனிருத் ரவிச்​சந்​தர் மற்​றும் சன் டிவி நெட்​வொர்க்​கின் நிர்​வாக இயக்​குநர்​களுள் ஒரு​வரும் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் ஐபிஎல் கிரிக்​கெட் அணி​யின் இணை உரிமையாள​ரு​மான காவ்யா மாறன் திரு​மணத்தை கிரீஸ் நாட்​டில் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இதில் பங்​கேற்​க நெருங்​கிய உறவினர்​கள் மற்​றும் முக்​கியப் பிர​முகர்​களுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டிருந்​தது.

அதன்​படி திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், தனது மனைவி துர்கா ஸ்டா​லின், மகன் உதயநிதி ஸ்டா​லின், மரு​மகள் கிருத்​திகா உதயநிதி மற்​றும் மரு​மகன் சபரீசன் ஆகியோ​ருடன் கிரீஸ் நாட்​டுக்​குச் சென்​றார். நடிகர் ரஜி​னிகாந்த் தனது மகள் சவுந்​தர்​யா​வுடன் திரு​மணத்​தில் பங்​கேற்​கச் சென்​றார்.

அனிருத் – காவ்யா மாறன் திரு​மண நிச்​சய​தார்த்​தம் நேற்று முன்தினம் நடை​பெற்ற நிலை​யில், நேற்று திரு​மணம் நடைபெற்றது.

திரு​மணத்​தில் பங்​கேற்ற ஸ்டாலின், தயாநிதி மாறன், ரஜினிகாந்த் மற்றும் நெருங்​கிய உறவினர்​கள், நண்​பர்​கள் மணமக்​களை வாழ்த்​தினர். சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர விடுதி ஒன்​றில் நவ.21-ம் தேதி திரு​மண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்​ட​மாக நடைபெற உள்​ளது.

இதில் அரசி​யல் தலைவர்கள், திரை​யுல​கப் பிரபலங்​கள், கிரிக்​கெட் நட்சத்திரங்கள் மற்​றும் தொழிலதிபர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *