விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் லதாவுடன் புகைப்படம் !!

சென்னை: ​
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் இன்று மற்றும் நாளை கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

கிரீஸ் நாட்டில் நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். இவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் லதாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தற்போது அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத், லதா ரஜினிகாந்தின் சகோதரர் மகன் ஆவார்.

கிரீஸ் நாட்டில் நடைபெறும் திருமணத்தை தொடர்ந்து வரும் 21-ந்தேதி சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர். திருமண வரவேற்பிற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *