கோவை பெரியார் அறிவுலகத்தில் உள்ள 4-வது தளத்தில் இயங்கும் தமிழ் நூல்கள் பிரிவு அலுவலகத்தில் சோதனை நடத்திய கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார்!!

கோவை:
புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு விவகாரம் தொடர்பாக கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2-வது முறையாக சோதனையில் ஈடுபட்டனர்.

காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் கடந்த மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

தரைத்தளம் மற்றும் ஏழு தலங்களுடன் கூடிய இந்த வளாகத்தில் நூலகங்கள் அறிவியல் கட்டமைப்புடன் கூடிய வளாகங்கள் கூட்டரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயர்களில் போலியான நூல்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தன. மாநிலம் முழுவதும் இந்த புகார் விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரித்து வருகின்றனர். பெரியார் நூலகத்தில் 2000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சமீபத்தில் அகற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பெரியார் அறிவுலகத்தில் கடந்த 10-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து டிஎஸ்பி இம்மானுவேல் ஞானசேகர் தலைமையிலான கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் 10 பேர் கொண்ட குழுவினர் இன்று (நவ.16) 2-வது முறையாக மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அலுவலகத்தில் 4-வது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவு அலுவலகத்தில் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள நூல்கள், அதன் பதிப்பக விவரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *