அமெரிக்காவில் வங்கி சேவை முடக்கம் – மக்கள் அவதி!!

அமெரிக்கா; அமெரிக்காவில் ஜேபி மோர்கன், பேங்க் ஆப் அமெரிக்கா, சேஸ், வால்ஸ் பார்கோ, யூஎஸ் பேங்க் அண்ட் டிரஸ்ட் உள்பட பல்வேறு வங்கிகளின் சேவைகள் முடங்கியுள்ளன.
இந்த வங்கிகளில் தினமும் கோடிக்கணக்கான டாலர் பரிவர்த்தனை நடந்து வந்த நிலையில் இந்த பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளை பார்வையிடுவதிலும், பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதிலும் சிரமம் நீடிக்கிறது.


ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை அணுக முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

தற்போது வங்கிகளின் சேவைகளில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டது என்றும் சைபர் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட் லுக், டீம்ஸ், கோ பைலட் தளங்களின் சேவைகள் முடங்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இருந்த தற்போது இந்த பாதிப்பு வந்துள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் பரவலாக விமான சேவைகளும் பாதிப்பை சந்தித்துள்ளன.

கடந்த நவம்பர் 13 அன்று அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொலைத்தொடர்பு மற்றும் ரூட்டர் கோளாறு காரணமாக அனைத்து விமானப் புறப்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

நாடு முழுவதும் 10,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது பல மணி நேரம் தாமதமாகின

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *