சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு; உடலை தனது தோளில் சுமந்து சென்ற முதல்வர் விஜய்!!

சென்னை:
சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் திரு.வி.க. நகர் மின்மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ.வான வி.எஸ்.பாபு, சுவாச பாதிப்பு காரணமாக கடந்த செப்.9-ம் தேதி அமைந்த கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதைக் கண்டறிந்த மருத்துவ குழுவினர், உரிய சிகிச்சை அளித்து வந்த நிலையில், 72 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மதியம் 2.24 மணிக்கு சிகிச்சை பலனின்றி வி.எஸ்.பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

முதல்வர் விஜய் பெரம்பூரில் உள்ள வி.எஸ்.பாபுவின் இல்லத்துக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, நேற்று மாலை 4 மணி அளவில், வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, தவெக கொடி போர்த்தப்பட்டிருந்த வி.எஸ்.பாபுவின் உடலை தனது தோளில் சுமந்து சென்ற முதல்வர் விஜய், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றினார்.

அதைத்தொடர்ந்து, மின் மயானம் வரை நடந்தே சென்றார். அவருடன் அமைச்சர்களும் சென்றனர். லட்சுமி அம்மன் கோவில் தெரு, டான் பாஸ்கோ பள்ளி வழியாக திருவிக நகர் பல்லவன் சாலை தாங்கல் இந்து மின் மயானத்தை இறுதி ஊர்வலம் வந்த டைந்தது. அதன் பின்னர் வி.எஸ்.பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்தவர் வி.எஸ்.பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *