திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் குழந்தை பாக்கியம் வரம் பெற்ற தம்பதியினர் மாடவீதிகளில் கரும்புத் தொட்டில் சுமந்து நேர்த்திக்கடன்!!

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதியினர் மாடவீதிகளில் கரும்புத் தொட்டில் சுமந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற் றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 7-ம் நாள் உற்சவம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.

இக்கோவிலில் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்யும் தம்பதியர், வேண்டுதல் நிறைவேறி குழந்தை பிறந்ததும் கரும்புத் தொட்டில் கட்டி மாடவீதிகளில் வலம் வருவது வழக்கம்.

அதன்படி, இன்று அதிகாலை முதலே ஏராளமான தம்பதியினர் 2 கரும்புகளை இணைத்து, அதில் புதுச்சேலையால் தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளை அதில் படுக்க வைத்தனர்.

பின்னர், அதனைத் தோளில் சுமந்தபடி கோவிலின் 4 மாடவீதிகளிலும் வலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

விடுமுறை தினம் மற்றும் தீபத் திருவிழாவை முன்னிட்டு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்வான மகா தீபம் வரும் 24-ம் தேதி மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *