சென்னை,
அறிமுக இயக்குநர் கார்த்திக் ஜெய் பழனி இயக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் ‘மேட்’, ‘மேட் ஸ்குயர்’ படங்களில் நடித்துள்ள அவர், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இதில் பிரார்த்தனா நாதன், தேஜு அஸ்வினி நாயகிகளாக நடிக்கின்றனர். இதை, ‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்தின் கே.எஸ்.சினிஷ், ரெடாக்டட் ஸ்டூடியோஸுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் தயாரிக்கிறது.
காதலை மையமாகக் கொண்ட இப்படம் கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகிறது. இதன் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.