முதலை, ஒட்டகம், கடல் குதிரை உள்ளிட்டவற்றின் இறைச்சியைச் சிறுவயதிலேயே சாப்பிட்டிருக்கிறேன்; சுருதிஹாசன் சொன்ன சுவாரசிய தகவல்!!

சென்னை,
எனது தந்தை சிறுவயதிலேயே விதவிதமான உணவுகளைச் சமைத்துக் கொடுத்திருக்கிறார். முதலை, ஒட்டகம், கடல் குதிரை உள்ளிட்டவற்றின் இறைச்சியைச் சிறுவயதிலேயே சாப்பிட்டிருக்கிறேன். என சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். நடிகை, பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட இவர், நடிகர் கமல்ஹாசன் – நடிகை சரிகா தம்பதியின் மூத்த மகள் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக ‘ஹே ராம்’ திரைப்படத்தில் அறிமுகமான இவர், 2009-ம் ஆண்டு வெளியான ‘லக்’ என்ற இந்திப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுவயதில் தான் ருசித்த வித்தியாசமான உணவு வகைகள் குறித்து சுருதிஹாசன் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது தந்தை சிறுவயதிலேயே விதவிதமான உணவுகளைச் சமைத்துக் கொடுத்திருக்கிறார். முதலை, ஒட்டகம், கடல் குதிரை உள்ளிட்டவற்றின் இறைச்சியைச் சிறுவயதிலேயே சாப்பிட்டிருக்கிறேன்.

குட்டி ஆக்டோபஸ் எனக்கு மிகவும் பிடித்த உணவு. ஒருமுறை குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தபோது, குழம்பில் கடல் குதிரை இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அதுவரை கடல் குதிரைகள் உண்மையிலேயே இருக்கும் என்பதே எனக்குத் தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் சுருதிஹாசன், விஜய் சேதுபதியுடன் ‘ட்ரெயின்’ மற்றும் பிரபாஸுடன் ‘சலார் பார்ட் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சினிமா பணிகளுக்கு மத்தியில் அவர் பகிர்ந்துள்ள இந்த உணவுப் பழக்க அனுபவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *