தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரணியின் மகன் திருவாசகன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜை!!

சென்னை,
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரணியின் மகன் திருவாசகன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜை, சென்னை போரூரில் உள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் இன்று விமரிசையாக நடைபெற்றது.

ஸ்டைல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்குத் தற்காலிகமாக ‘PRODUCTION NO.1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராம் சேவா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் பரணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது மகன் திருவாசகன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகத் திரையுலகில் அறிமுகமாகிறார்.

இளைஞர்களின் வாழ்க்கையையும், சமகாலச் சமூகத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மர்மத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.


காதல், குடும்பப் பாசம் மற்றும் விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த ஒரு ‘எமோஷனல் சஸ்பென்ஸ் த்ரில்லராக’ இத்திரைப்படம் தயாராகிறது.

கதாநாயகன் திருவாசகனுடன், டாக்டர் சரவணன் ஒரு மிக முக்கியக் கதாபாத்திரத்திலும், சினாமிகா கதையை நகர்த்தும் சக்திவாய்ந்த பாத்திரத்திலும் நடிக்கின்றனர். இவர்களுடன் பல திறமையான புதுமுகக் கலைஞர்களும் இணைந்துள்ளனர்.

மக்கள் தொடர்புப் பணிகளை கோவிந்தராஜ் மேற்கொள்ள, இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *