ஷாருக்கானுக்கு தலைக்கனம் அதிகம் அவர் சக நடிகர்களிடம் ஆணவமாக நடந்து கொள்வார் என்றும் பலர் தன்னிடம் கூறினார்கள்; பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!!

சென்னை:
ஷாருக்கானுக்கு தலைக்கனம் அதிகம் அவர் சக நடிகர்களிடம் ஆணவமாக நடந்துகொள்வார் என்றும் பலர் தன்னிடம் கூறினார்கள்.. நடிகர்கள் அமிதாப் பச்சன், திலீப் குமார் ஆகியோரைப் பற்றி ஷாருக்கான் தவறாகப் பேசுவதாகவும் கேள்விபட்டேன். இதனால் ஷாருக்கானிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஆனால், படப்பிடிப்பின்போது ஷாருக்கானே முதலில் தன்னிடம் வந்து அறிமுகம் செய்துகொண்டார். அப்போது, “ஹலோ, நான் ஷாருக்கான். ‘ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்’ படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது” என்று ஷாருக்கான் பாராட்டினார்.

இதனால் ஆச்சரியமடைந்த நான், மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தபோதிலும் அவரே நேரில் வந்து பேசியது என்னை கவர்ந்தது. அதன்பிறகு இருவரும் சகஜமாகப் பேசிப் பழகினே” என்றார்.

மேலும், ஷாருக்கான் குறித்து தான் கேள்விப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல என்பதை நேரில் சந்தித்த பிறகு புரிந்துகொண்டதாகவும், அவரைப் பற்றி தான் நினைத்தது முற்றிலும் தவறு என்றும் தெரிவித்துள்ளார். ஷாருக்கான் நடித்த ‘ஜாது’ திரைப்படம் உடனடியாக வெளியாகவில்லை.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘யே லம்ஹே ஜுதாயி கே’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தின் சில காட்சிகளில் மாற்று நடிகர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஷாருக்கானின் சில காட்சிகளுக்கு மற்றொரு நடிகர் பின்னணி குரல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *