தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய வேண்டும் – அண்ணாமலை விமர்சிப்பு!!

சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய வேண்டும் என வி த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெகவுக்கு ஆதரவாக அதிகம் பேசுபவர் காங்கிரஸ் மாநிலத்தலைவர் மாணிக்கம் தாகூர்தான். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆட்சியருக்குக் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்கிறார்.

சட்டம் ஒழுங்கு சிறப்பாகவும் விலைவாசி உயர்வு இல்லை என்றும் கூறுகிறார். அதேநேரத்தில், மாணிக்கம் தாகூர் கருத்தை செல்வப்பெருந்தகை எதிர்க்கிறார்.

எனவே, மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய வேண்டும். அதுதான் அவருக்குப் பொருத்தமாக இருக்கும்.

முருகப் பெருமானை எவ்வாறு வழிபட வேண்டும் என்பது குறித்து மாணிக்கம் தாகூர் பேச வேண்டாம். அவர் தவெகவில் இணைந்த பிறகு பேசட்டும். அதன்பிறகு எனது கருத்தை பதிவு செய்கிறேன்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *