தவெக சார்​பில் இரண்​டாம் கட்ட கல்வி விருது மற்​றும் ஊக்​கத்​தொகை வழங்​கும் விழா; சென்னையில் நவ.26, 27-ல் முதல்வர் விஜய் வழங்குகிறார்!!

சென்னை:
தவெக சார்​பில் இரண்​டாம் கட்ட கல்வி விருது மற்​றும் ஊக்​கத்​தொகை வழங்​கும் விழா வரும் நவ.26 மற்​றும் 27 தேதிகளில் நடை​பெறவுள்​ளது.

தவெக சார்​பில் கடந்த மூன்று ஆண்​டுகளாக 10 மற்​றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்​தேர்​வில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்​களை பிடிக்​கும் மாணவ- மாணவியர்​களுக்கு ஊக்​கத்​தொகை மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி, கடந்த 4-ம் தேதி சென்​னை​யில் நடை​பெற்ற முதற்​கட்ட விழா​வில் அரியலூர், கடலூர், கள்​ளக்​குறிச்சி, திரு​வண்​ணா​மலை மற்​றும் விழுப்​புரம் மாவட்​டங்​களில் உள்ள 30 தொகுதி​களைச் சேர்ந்த மாணவர்​களுக்​கு முதல்​வர் விருதுகளை வழங்​கினார்.

இந்​நிலை​யில் 2-ம் கட்​ட விழா நவ.18-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் சில காரணங்​களுக்​காக தேதி தள்​ளி வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்த விழா நவ.26 மற்​றும் 27-ம் தேதி நடை​பெறவுள்​ள​தாக தகவல்​கள் வெளியாகி உள்​ளன.

அதன்​படி, சென்னை நீலாங்​கரையில் பிற்பகல் 2.30 மணிக்​குத் தொடங்​கும் ​விழா​வில், முதல்​வர் விஜய் பங்​கேற்று 36 தொகுதி​களின் மாணவர்​களுக்கு விருதுகளை​யும் ஊக்​கத் தொகையையும் வழங்​கவுள்​ளார்.

இதில் நவ.26-ம் தேதி கோவை, ஈரோடு, திருப்​பூர், நீல​கிரி மற்​றும் பெரம்​பலூர் மாவட்​டங்​களைச் சேர்ந்த தொகுதி மாணவர்​களுக்​கும் நவ.27-ம் தேதி சேலம், நாமக்​கல், கரூர் மற்​றும் திருச்சி ஆகிய மாவட்​டங்​களைச் சேர்ந்த தொகுதி மாணவர்​களுக்​கும் விருதுகள் வழங்​கப்​பட உள்​ளன.

இவ்​விழா ஏற்​பாடுகளை முன்​னின்று கவனித்து வரும் அமைச்​சர் என்.ஆனந்த், சம்​பந்​தப்​பட்ட மாவட்ட எம்​எல்ஏ-க்​கள் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​களு​டன் ஆலோ​சனை நடத்தி, மாணவர்​களுக்​கான தனி அடை​யாள அட்​டைகள் மற்​றும் பெற்​றோருக்​கான அனுமதிச் சீட்​டுகளை வழங்​கி​யுள்​ள​தாகவும், இவை மாவட்ட நிர்​வாகி​கள் மூலம் உரிய​வர்​களிடம் விநியோகிக்​கப்​பட்டு வரு​வ​தாகவும் தகவல் வெளியாகி உள்​ளது.

மாணவர்​கள் மற்​றும் பெற்​றோரை சென்​னைக்கு அழைத்து வர பேருந்​து ஏற்​பாடு செய்யப்​பட்​டுள்​ளது. தங்​கு​வதற்கு அறைகள் மற்​றும் காலை உணவு வழங்​கப்​பட உள்​ளது. தொடர்ந்து, பகல் 11 மணி​யளவில் விழா அரங்​குக்கு அழைத்து வரப்​பட்டு, மதிய உணவு மற்​றும் சிற்​றுண்​டிகள் வழங்​கவும் ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டுள்​ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *