உங்களை எப்போதுமே நல்ல வழியில் மட்டும்தான் நடத்தி அழைத்துச் செல்வேன் ; பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கருத்து!!

சென்னை:
தவெக சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக நவ.4-ம் தேதி 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையை முதல்வர் விஜய் வழங்கினார். இந்நிலையில் 2-ம் கட்ட விழா, சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு சால்வை அணிவித்து, சான்றிதழுடன் ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது: உங்களிடம் ஒன்று சொல்ல நினைக்கிறேன். அதை சிலர் அரசியலாக்க முயற்சி செய்வார்கள். அதைப் பற்றியெல் லாம் கவலை இல்லை. இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ஊழல் என்பது பழமையான ஒன்று என கடந்து போய்விட முடியாது.

அது ஒரு தீராத நோய் போன்றது. அதை குணப்படுத்துவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை நாம் செய்தே ஆக வேண்டும். அண்மையில் ஒரு ஊழலை பற்றி எல்லோரும் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அதாவது, மற்ற துறைகளில் ஏதாவது தவறு நடந்தால், அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம், நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்.

அதன்பிறகு நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். ஆனால், ஒரு கல்வித்துறையிலேயே, ஊழல் நடக்கிறது என்றால் அதை எப்படிப் பார்த்துக்கொண்டு இருப்பது. ‘மற்ற துறைகளில் தவறு நடந்தால் பரவாயில்லையா?’ என சில அறிவுஜீவிகள் கேட்பார்கள்.

எந்தத் துறையில் தவறு நடந்தாலும் தவறு, தவறுதான். ஆனால் பள்ளிப் பாதுகாப்பில் விளையாடி உள்ளார்கள். இதுபோன்ற பிரச்சினையால் தான் கும்பகோணம் பள்ளி விபத்து ஏற்பட்டது. ‘என் மேஜையில் 3 கோப்புகள் இருக்கின்றன’ என்று கூறினேன்.

எதிர்க்கட்சியினர் திறங்க, திறந்துதான் பாருங்க என்றனர். சட்டப் பேரவையில் அமைதியாக இருப்பேன். அவர்களே ஆசைப்பட்டுக் கேட்டதால் கோப்புகளை திறக்க கூறினேன்.

மாணவர்கள் படிக்கும் நூலக புத்தகங்களில் கூட ஊழல் நடந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு ஆரம்ப காலகட்டத்திலேயே இப்படி ஒரு ஊழலை செய்துள்ளனர். இவர்களை என்ன செய்வது? தற்போது கோவை பெரியார் அறிவுலகத்தில் முறைகேடு நடந்திருப்பது வெளியே வந்துள்ளது.

மற்ற நூலகங்களில் எல்லாம் என்னென்ன நடந்திருக்கிறதோ, அவையும் ஒவ்வொன்றாக வெளியே வரும். இதெல்லாம் அறிவு உலகமா… இல்லை ஊழல் உலகமா? என தெரியவில்லை.

உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் இதுபோன்ற விஷயங்கள் நடந்தால் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டேன். உங்களை எப்போதுமே நல்ல வழியில் மட்டும்தான் நடத்தி அழைத்துச் செல்வேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார். இவ்விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு 14 வகையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இன்று மதியம் 2 மணிக்கு கரூர், நாமக்கல், சேலம், திருச்சி மாவட்ட மாணவர்களுக்கான 3-ம் கட்ட ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *