கிருஷ்ணகிரியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.9.89 கோடியில் கட்டப்பட்ட 148 புதிய வீடுகளைத் திறந்து வைத்த முதல்வர் விஜய்!!

சென்னை:
கிருஷ்ணகிரியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.9.89 கோடியில் கட்டப்பட்ட 148 புதிய வீடுகளைத் திறந்து வைத்த முதல்வர் விஜய், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர பணக்கொடை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இது​குறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கிருஷ்ணகிரி மாவட்​டம், பாம்​பாறு அணை இலங்​கைத் தமிழர் மறு​வாழ்வு முகாமில், ரூ.8.52 கோடி​யில் கட்​டப்​பட்டு, ரூ.1.37 கோடி​யில் அடிப்​படை வசதி​களும் செய்து கொடுக்​கப்​பட்​டுள்ள 148 புதிய வீடுகளை, தலை​மைச் செயல​கத்​தில் இருந்து காணொலி வாயி​லாக முதல்​வர் விஜய் திறந்து வைத்​தார்.

மேலும், முகாம்​வாழ் இலங்​கைத் தமிழர்​களின் நலனைக் கருத்​தில் கொண்டு, அவர்​களுக்கு தற்​போது வழங்​கப்​பட்டு வரும் மாதாந்​திரப் பணக்​கொடையை, குடும்​பத் தலை​வருக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.1,800 ஆகவும், குடும்ப உறுப்​பினர்​களாக உள்ள 12 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்ட பெரிய​வர்​களுக்கு ரூ.1,000-ல் இருந்து ரூ.1,200 ஆகவும், 12 வயதுக்​குட்​பட்ட குழந்​தைகளுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.600 ஆகவும் உயர்த்​தப்​படுகிறது.

மாதாந்​திரப் பணக் கொடையை ஆண்​டுக்கு ரூ.14.95 கோடி கூடுதல் செல​வினத்​தில், 19,710 குடும்​பங்​களைச் சேர்ந்த 56,638 முகாம்​வாழ் இலங்​கைத் தமிழர்​கள் பயன்​பெறும் வகை​யில், 4 குடும்​பங்​களைச் சேர்ந்த 16 பயனாளி​களுக்கு முதல்வர் விஜய் நேற்று வழங்கி தொடங்கி வைத்​தார்.

நிகழ்ச்​சி​யில், அமைச்​சர் க.தென்​னரசு, தலை​மைச் செயலர் மு.சாய்​குமார், பொதுத் துறை செயலர் எ.சுந்​தரவல்லி, அயல​கத் தமிழர் நலத்​துறை இயக்​குனர் ச.வளர்​மதி, பொதுத்​துறை இணை செயலர் மா.சவு.சங்​கீதா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *