தவெக எம்எல்ஏ மீது நேற்று முன்தினம்தான் புகார் வந்தது – நியாமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது; டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!!

சென்னை:
“புகாருக்கு உள்ளான தவெக எம்எல்ஏ மீது நேற்று முன்தினம்தான் புகார் வந்தது. இதையொட்டி, வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. நியாமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது” என டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சிறந்த குறும்படங்களுக்கு தற்போது பரிசு வழங்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சிங்கப் பெண் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிங்கப்பெண் படை நடவடிக்கையால் பெண்கள் நம்பிக்கையாக உள்ளனர்.

புகாருக்கு உள்ளான தவெக எம்எல்ஏ மீது நேற்று முன்தினம்தான் புகார் வந்தது. இதையொட்டி, வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்.பி விசாரித்து வருகிறார். நியாமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலையில் 30 எஸ்.பிக்கள், 15,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டோம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்ற ஏதுவாக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *