Amrita agri students ; தென்னையில் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவது குறித்து அமிர்தா வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கோவை ;

கிணத்துக்கடவு வட்டம், குளத்துப்பாளையம் ஊராட்சியில், நவம்பர் 12, 2026 அன்று, ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் (RAWE) ஒரு பகுதியாக, அமிர்தா வேளாண்மைக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் ஒருங்கிணைந்த வெள்ளை ஈ மேலாண்மை உத்திகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

அமிர்தா வேளாண்மைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் சுதீஷ் மணலிலின் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் அபிஷேக், தேவநாராயணன், தேவப்ரியா, ஃபிஸா, கார்த்திகேயன், நிரஞ்சனா, நிவேதா, பிரார்த்தனா, ரித்திகா, சாய் ரிதன்யா, சாண்ட்ரா மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

தென்னைப் பயிர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை ஈயை அடையாளம் காணுதல், அதன் தாக்குதலைக் கண்காணித்தல் மற்றும் திறம்படக் கட்டுப்படுத்துதல் குறித்து தென்னை விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

வெள்ளை ஈக்கள் தாவரங்களிலிருந்து சாற்றை உறிஞ்சுவதன் மூலம் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவதோடு, வைரஸ் நோய்கள் பரவுவதற்கும் காரணமாக அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *