100 ஆம்புலென்ஸ்களை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு!!

சென்னை: சுகாதாரத் துறையில் 108 அவசர சேவைக்கு கொள்முதல் செய்யப்பட உள்ள 100 ஆம்புலென்ஸ்களை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்தில் முதல்வர் விஜய் நேற்று மாலை ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக அரசால் இயக்கப்படும் பல்வேறு விதமான ஆம்புலென்ஸ்களைப் பார்வையிட்டார்.

மேலும், தற்போதைய பருவமழைக் காலத்தில் வெள்ளம், புயல் உட்பட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள 108 ஆம்புலென்ஸ் பிரிவு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதேபோல், 104 – சுகாதார உதவி எண், 14416 – தொலை நிலை மனநலச் சேவை, 102 – பிரசவத்துக்குப் பின்னர் தாய்மார்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் சேவை, 155377 – இலவச அமரர் ஊர்தி சேவை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இயற்கைப் பேரிடர் காலங்களில் சென்னையில் உள்ள அவசரகால அழைப்பு மையத்தின் செயல்பாடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துணை அழைப்பு மையத்துக்கு மாற்றும் ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மாநிலத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களில் அவசர மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உட்பட நவீன மருத்துவ உபகரணங்கள் தரப்பட்டுள்ளன.

இந்த பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் விஜய், அவசர மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்தி உயிரிழப்புகளை குறைக்கத் தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஏற்கெனவே கூடுதலாக 100 ஆம்புலென்ஸ்களை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட் டுள்ள நிலையில், அவற்றை விரைவாக வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் முதல்வர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையில் சுகாதாரத் துறை செயல்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், செயலர் தாரேஸ் அகமது, அதிகாரிகள் உடனிருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *