நீலகிரியில் உறை பனிப் பொழிவு: கடும் குளிரால் பொது​மக்​களும், சுற்​றுலாப் பயணிகளும் அவதி!!

ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​தில் உறைபனிப் பொழிவு தொடங்​கி​யுள்​ள​தால், கடும் குளிர் நிலவி வரு​கிறது. இத​னால் பொது​மக்​களும், சுற்​றுலாப் பயணிகளும் அவதி​யடைந்​துள்ளனர்.

ஊட்​டி​யில் கடந்த சில தினங்​களாக நீர்ப்​பனி பெய்த நிலை​யில், நேற்று முதல் உறைபனிப் பொழிவு தொடங்​கி​யுள்​ளது.

இத​னால் மாவட்​டம் முழு​வதும் கடும் குளிர் நில​வியது. ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் நேற்று குறைந்​த​பட்ச வெப்​பநிலை 5.9 டிகிரி செல்​சி​யஸாகவும், அதி​கபட்ச வெப்​பநிலை 13.6 டிகிரி செல்​சி​யஸாகவும் பதிவானது.

புல்​வெளி​கள், சதுப்பு நிலங்​கள், மைதானங்​கள் மற்​றும் வாக​னங்​களின் மீது உறைபனி படர்ந்து, அவை வெண்​மையாகக் காட்​சி​யளித்​தன. கடும் குளிர் காரண​மாக பொது​மக்​களும், சுற்​றுலாப் பயணிகளும் அவதிக்​குள்​ளாகினர். பொது​மக்​கள் ஆங்​காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்​தனர்.

இனி வரும் நாட்​களில் வெப்​பநிலை மேலும் குறைந்து, உறைபனி​யின் தாக்​கம் அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாகக் காலநிலை ஆராய்ச்​சி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *