சீனாவில் இருந்து வங்காளதேசம் நோக்கி சென்ற வெடிமருந்து ரகசிய சரக்கு கப்பல்; சுற்றிவளைத்த இந்தோனிசிய கடற்படை…

சீனாவின் லியானியுங்காங் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் 7 அன்று வங்காளதேசம் நோக்கி கடல்வழியாக சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதையடுத்து எரிபொருள் நிரப்புவதற்காக, பெலவான் கடல் பகுதியில் இந்தோனிசிய கடற்படையின் அனுமதியில்லாமல், அந்த சரக்கு கப்பல் நின்றது.

இதைத்தொடர்ந்து அந்த சரக்கு கப்பலின் வானொலி அழைப்புகளுக்கு, இந்தோனிசிய கடற்படை அதிகாரிகள் தொடர்புகொண்ட போது, கப்பல் மாலுமிகள் பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.
இதன் காரணமாக சந்தேகத்திற்கிடமான அந்த சரக்கு கப்பலை, கே.ஆர்.ஐ சிகாலு 857 என்ற இந்தோனிசிய கடற்படை ரோந்து கப்பல் வழிமறித்து சோதனை செய்தது.

அப்போது சரக்கு கப்பலில் இருந்த 36 கண்டெய்னர்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது, 15 கண்டெய்னர்களில் 405 டன் சோடியம் பெர்குளோரேட் வெடிமருந்து இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், பதிவு செய்யப்படாத லட்சக்கணக்கான 4ஜி சிம் கார்டுகள் இருந்ததும் சோதனையில் தெரியவந்தது.

இந்த சோடியம் பெர்குளோரேட் வெடிமருந்தானது, ராக்கெட் மற்றும் ஏவுகணை உந்து எரிபொருட்களின் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு ஆக்சிஜனேற்றியாக அறியப்படுகிறது.
இந்த வெடிமருந்தை கொண்டு 100 ஏவுகணைகள் வரை தயாரிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்காள தேசத்தில் வெடிமருந்துகள் மற்றும் சிறு ஆயுதங்களை தயாரிக்கும் உள்நாட்டு ராணுவ தொழில் இருந்தாலும், சோடியம் பெர்குளோரேட்டை பயன்படுத்தும் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை தயாரிக்க தேவையான உள்கட்டமைப்பு இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்த வெடிமருந்து பொருட்களை ஆர்டர் செய்தது யார் என தெரியாமல் உள்ளதால், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *