சையது மோடி பாட்மிண்டன் தொடர்: கால் இறுதி சுற்றில் நுழைந்​த உன்னதி ஹூடா, தன்வி!!

லக்னோ:
சையது மோடி சர்​வ​தேச பாட்​மிண்​டன் தொடர் லக்னோவில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் இரட்​டையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-9, 21-8 என்ற நேர் செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த ஸ்ரேயா பாலாஜி, பிரணவி நடராஜன் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது.

மகளிர் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யாவின் தன்வி சர்மா, உன்​னதி ஹூடா, அன்​மோல் ஹார்ப், தஸ்​னிம் மிர் ஆகியோர் கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தனர்.

தன்வி சர்மா 2-வது சுற்​றில் 18-21, 21-18, 21-18 என்ற செட் கணக்​கில் போராடி இந்​தோ​னேஷியாவின் முதி​யாரா ஆயு புஸ்பிதாசா​ரியை வீழ்த்​தினார். இந்த ஆட்​டம் ஒரு மணி நேரம் 8 நிமிடங்​கள் நடை​பெற்​றது.

உன்​னதி ஹூடா 21-14, 21-18 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் இஷிகா ஜெய்ஸ்வாலை​யும், தஸ்​னிம் மிர் 21-19, 21-15 என்ற செட் கணக்​கில் ஸ்​காட்​லாந்​தின் கிறிஸ்டி கில்​மோரை​யும் வீழ்த்​தினர். அன்​மோல் ஹார்ப் 21-16, 21-15 என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த அஷ்மிதா சாலிஹாவை தோற்​கடித்​தார்.

ஆட​வர் இரட்​டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்​தி​யாவின் ஹரி​கரண் அம்​சகருணன், எம்.ஆர்.அர்​ஜூன் ஜோடி 21-12, 22-20 என்ற செட் கணக்​கில் பிரான்​ஸின் மேல் காட்​டோன், லூகாஸ் ரெனோயர் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் நுழைந்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *