தவெக அரசு முழு பலத்துடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, சிறப்பான ஆட்சியை நடத்தும் – இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும்; அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!!

சென்னை:
தவெக அரசு முழு பலத்துடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, சிறப்பான ஆட்சியை நடத்தும்,இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும்; அமைச்சர் விஸ்வநாதன் உறுதி..

உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவுக்கு ஒரே நோக்கம், ஆட்சியைக் கவிழ்ப்பதுதான்.

தவெக ஆட்சி அமைந்தபோது ஒரு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும், பின்னர் 3 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்றும் கூறி வந்தனர்.

தற்போது 6 மாதங்களை நெருங்கியுள்ளது. தவெக அரசு முழு பலத்துடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, சிறப்பான ஆட்சியை நடத்தும். இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும்.

திமுகவினர் இப்போதும் அதிகார தோரணையிலேயே செயல்பட்டு வருகின்றனர்.

தவெகதான், தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என்பதை மறந்துவிட்டு, தாங்களே ஆட்சியில் இருப்பதைப்போல திமுகவினர் செயல்படுகின்றனர்.

தூய்மையான, நேர்மையான ஆட்சியை வழங்குவதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *