பாகு:
அஜர்பைஜான் நாட்டிலுள்ள பாகு நகரில் யு-15 உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘கே’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று கியூபாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 6-4 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் விக்டர் லாலவ்ம்புயா (1, 23-வது நிமிடங்கள்), நிபாஸ் மீட்டி வாஹெங்பாம் (6, 22-வது நிமிடங்கள்), லால்ரெம் ருயாவ்ஃபெலா (12, 27-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.
இந்திய இளையோர் அணி, லாவோஸ், கேமரூன், பஹ்ரைன், டிரினிடாட் அண்ட் டொபாகோ, கியூபா ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றது.
அதேவேளையில், செனகல், ஹோண்டுராஸ், ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய அணிகளிடம் தோல்வியடைந்தது.
கிரெனடா அணிக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது. இதன் மூலம் இந்திய அணி 87-வது இடத்தைப் பிடித்தது.