‘மாற்றம்’ என்ற பெயரில் மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது தான் விஜய்யின் பெரும் அரசியல் சாதனை; தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!!

சென்னை:
“தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 300-க்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அவற்றில் 30-க்கும் அதிகமான குற்றங்களில் தவெகவினர் சம்பந்தப்பட்டுள்ளனர்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவறான கண்ணோட்டத்தில் குறுஞ்செய்தி அனுப்பிய தாக வெளியான தகவலின் தாக்கம் தணிவதற்குள், கோவை காரமடை தவெக ஒன்றியக் கழகச் செயலாளர் கருப்பசாமி என்பவர் அக்கட்சியின் பெண் நிர்வாகிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒத்துழைக்க மறுத்ததால் அப்பெண்ணை சாதி ரீதியாக பேசி அவமானப்படுத்தியதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

பெண்களை வெறும் போதைப் பொருளாக மட்டுமே நினைக்கும் தவெகவினரின் ஆணவமும், அதைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வரின் அலட்சியமும் கடும் கண்டனத்துக்குரியது.

தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 300-க்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 30-க்கும் அதிகமான குற்றங்களில் தவெகவினர் சம்பந்தப்பட்டுள்ளனர். தவெகவினரிடம் இருந்தே தமிழகப் பெண்களை பாதுகாக்க முடியாத உங்களுக்கு முதல்வர் பதவி எதற்கு?

ஆனால், இதை எதையும் கண்டிக்காமல், பெண்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் நாளொரு காஸ்டியூம் தினமொரு பர்பாமென்ஸ் என ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். இப்படிப்பட்டவரா மாற்றத்தின் அறிகுறி?

‘மாற்றம்’ என்ற பெயரில் மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது தான் விஜய்யின் ஆகப் பெரும் அரசியல் சாதனை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *