தமிழகத்தில் தவெக ஆட்சி இருக்கும் வரை விடிவே இல்லை – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை:
“தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்துக்கு விடிவே இல்லை” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற காட்சி இணையத்தில் பரவி வருவதை சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை.

இதைப் பற்றி எல்லாம் முதல்வருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்துக்கு விடிவே இல்லை!” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்து கடந்த 26-ம் தேதி இரவு போலீஸாரை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிச் சென்றனர். அவர்களில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், சேலம் அருகே ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய இரண்டு ரவுடிகளை உடனடியாக போலீஸார் தேடி கண்டுபிடித்து நள்ளிரவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் “தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்துக்கு விடிவே இல்லை” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *