புதிய சிறைத்துறை இயக்குநராக கே.சங்கர் நியமனம்!!

சென்னை:
தேனி மாவட்ட சிறை​யில் இருந்து 17 கைதி​கள் தப்​பிய சம்​பவம் பெரும் விமர்​சனத்​துக்​குள்​ளாகி​யுள்ள நிலை​யில், சிறைத்​துறை இயக்​குநராக இருந்த டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் மாற்​றப்​பட்டு, கூடுதல் டிஜிபி கே.சங்​கர், சிறைத்​துறை இயக்​குநராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

தேனி மாவட்ட சிறை​யி​லிருந்து 17 கைதி​கள் சிறைக் காவலர்​களைத் தாக்​கி​விட்டு தப்​பிச் சென்ற சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இதற்கு முன்பு சென்னை புழல் சிறை​யில் இருந்து நேபாள நாட்​டைச் சேர்ந்த கைதி உள்​பட 2 பேர் தப்​பிச் சென்​றனர். அடுத்​தடுத்து நடை​பெற்ற இந்​தச் சம்​பவங்​கள் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தின.

தப்​பிய​வர்​கள் கைது செய்​யப்​பட்​டாலும், இந்​தச் சம்​பவங்​களைச் சுட்​டிக்​காட்டி எதிர்க்​கட்​சிகள் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்​பின.

இதையடுத்து, தமிழகம் முழு​வதும் உள்ள சிறைகளின் பாது​காப்​பைச் சிறைத்​துறை டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் தீவிரப்​படுத்​தினார்.

இந்​நிலை​யில், சிறைகள் மற்​றும் சீர்​திருத்​தப் பணிகள் துறை இயக்​குநராக இருந்த டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர், சென்னை மின்​வாரிய லஞ்ச ஒழிப்​புப் பிரிவு டிஜி​பியாக (தலைமை அதி​காரி) நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

அமலாக்​கப் பிரிவு சிஐடி கூடுதல் டிஜி​பியாகப் பணி​யாற்​றிய கே.சங்​கர், சிறைத்​துறை​யின் புதிய இயக்​குநராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதேபோல், காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த டிஜிபி சஞ்​சய் மாத்​தூர், மாநில குற்ற ஆவணக் காப்​பக டிஜி​பியாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அங்கு ஐஜியாகப் பணி​யாற்​றிய சோனல் சந்​திரா, தலை​மையிட ஐஜியாக மாற்​றப்​பட்​டுள்​ளார்.

தாம்​பரம் காவல் ஆணை​யரகத்​தில் பள்​ளிக்​கரணை துணை ஆணை​யராகப் பணி​யாற்​றிய பி.ரகுபதி, கரூர் மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

சென்னை வடக்கு பொருளாதா​ரக் குற்​றப்​பி​ரிவு எஸ்.பி-யாக இருந்த ஆர்.ஸ்டா​லின், தென்​காசி மாவட்ட எஸ்.பி-யாகவும், அங்கு பணி​யாற்​றிய எஸ்.அசோக்​குமார், மதுரை தீவிர​வாதத் தடுப்​புப் பிரிவு எஸ்.பி-யாகவும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்​கான உத்​தரவை உள்​துறைச் செயலர் கார்த்​திக் நேற்று பிறப்பித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *