செங்​கல்​பட்டு அருகே சரக்கு லாரி​யில் அடைத்​து கடத்தப்பட்ட 25 மாடுகள் மீட்பு!!

செங்கல்பட்டு:
இறைச்​சிக்​காக மாடுகள் கடத்​தப்​படுவ​தாக கிடைத்த தகவலின் பேரில் போலீ​ஸார் விரைந்து செயல்​பட்டு, சரக்கு லாரி​யில் அடைத்​துக் கொண்டு செல்​லப்​பட்ட 25 மாடுகளை மீட்​டனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மறைமலைநகர் அருகே நேற்று முன்​தினம் மாலை நீட்​டிக்​கப்​பட்ட சரக்கு பெட்​டகத்​துடன் கூடிய லாரி ஒன்று சென்​றுகொண்​டிருந்​தது.

அந்த லாரி​யின் பின்புறத்​தி​லிருந்து சாணம் மற்​றும் சிறுநீர் வெளியேறியதைக் கவனித்த சாய் விக்​னேஷ் என்​பவர், அதில் மாடுகள் அடைத்து கொண்டு செல்​லப்​படுவதை சந்​தேகித்து உடனடி​யாக காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரி​வித்​தார்.

இதையடுத்து போலீ​ஸார் லாரியை விரட்​டிச் சென்று பழவேலி அருகே மடக்​கிப் பிடித்​தனர். லாரியை சோதனை​யிட்​டபோது, அதில் 25 மாடுகள் மிகவும் நெருக்​க​மாக அடைத்து வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

விசா​ரணை​யில் ஆந்​திர மாநிலத்​தி​லிருந்து கேரள மாநிலத்​துக்கு இறைச்​சிக்​காக மாடுகள் கொண்டு செல்​லப்​படுவ​தாக ஓட்​டுநர் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

லாரிக்​குள் மாடுகள் நிற்​ப​தற்​கும், நகர்​வதற்​கும் போதிய இட​மின்றி ஒன்​றின் மீது ஒன்று விழுந்த நிலை​யில் இருந்​தன.

அவற்​றின் மூக்​கணாங்​கயிறுகள் லாரி​யின் மேற்​கூரையில் கட்​டப்​பட்​டிருந்​த​தாகவும், உணவு, குடிநீர், காற்​றோட்​டம் இல்​லாததால் மாடுகள் சிரமப்​பட்​ட​தாகவும் கூறப்​படு​கிறது.

கோசாலையில் ஒப்படைப்பு இதையடுத்து மீட்​கப்​பட்ட 25 மாடுகளும் உடனடி​யாக மருத்​துவ சிகிச்சை, பராமரிப்​புக்​காக கோசாலை​யில் ஒப்​படைக்​கப்​பட்​டன.

இது தொடர்​பாக விலங்​கு​கள் நல அமைப்​பான ஆல்​மைட்டி அனிமல் கேர் அறக்​கட்​டளை சார்​பில் போலீ​ஸில் புகார் அளித்து, மாடுகளைத் துன்​புறுத்தி கொண்டு சென்​றவர்​கள் மீது உரிய சட்ட நட​வடிக்கை எடுக்க வலியுறுத்​தப்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *