ராவல்பிண்டி:
பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டி யில் நடைபெற்று வந்தது.
இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 98 ரன்களும், பாகிஸ்தான் அணி 325 ரன்களும் எடுத்தன. 123 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தில் 93 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது.
மிலன் ரத்னாயகே 60, அஷிதா பெர்னாண்டோ 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 95 ஓவர்களில் 316 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அசிதா பெர்னாண்டோ 2 ரன்களில் முகமது அப்பாஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மிலன் ரத்னாயகே 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ், அமிர் ஜமால் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 90 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
அசான் அவைஸ் 32, அமிர் ஜமால் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்து இருந்தது.
பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் 2 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடைசியாக அந்த அணி 2024-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது.