சென்னை
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கரூரில் நடந்தது பெரும் துயரம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது,
கரூரில் நடந்த சம்பவம் பெரும் துயரம், கடும் துயரம், இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக்கூடாத துயரம்.
மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று கண்ட காட்சிகள் என் கண்களை விட்டு அகலவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்
என்றார்.