உடலுக்கு பல நன்மைகளை தரும் விரால் மீன் !!

கடல் மீன்களைவிட சில நன்னீர் மீன்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதில், விரால் மீனும் ஒன்று.


இது புரதம் நிறைந்த மீன் வகை ஆகும். உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் விரால் மீன் உணவுகளை அவ்வப்போது உண்டு வருவது நல்லது என்று கூறப்படுகிறது.


விரால் மீன் இறைச்சியில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். கர்ப்பிணிகள் விரால் மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் கண் பார்வை திறன், மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றும், குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த மீனில் நிறைய சுண்ணாம்புச்சத்து உள்ளது. இதனால், எலும்புகளை வலுவாக்கி, மூட்டு வலி, கால் வலி போன்ற பாதிப்புகளை தணிக்கிறது. இது தவிர, கண் பார்வை கோளாறுகளை தடுக்கும். மூளை செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கவும், தசை வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது.

விரால் மீன் பொதுவாக பாதுகாப்பான உணவாக கருதப்பட்டாலும், அதிக அளவு உட்கொள்ளும்போது சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதனை தேவைக்கு அதிகமாக சாப்பிடும்போது வயிற்று வாயு அல்லது செரிமான கோளாறுகள் ஏற்படலாம்.

இருப்பினும் இது விரால் மீனுக்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து மீன்களுக்கும் பொருந்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் சரியாக வேக வைக்காத விரால் மீன் உணவை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாக்டீரியா தொற்று ஏற்படலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *