பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் தவிடுபொடியாக்கி வெற்றிவாகை சூட முதல்வர் ஸ்டாலினுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் – நிர்வாகிகள், தொண்டர் களுக்கு செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்!!

கோவை,

தமிழ்நாடு தலை குனியாது என்ற திமுகவின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி’ என்ற பிரச்சார முகாம் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராம் நகரில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோவை மண்டல திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி எம்எல்ஏ கலந்து கொண்டு கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசும்போது,

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள் துடிப்பாக செயல்பட வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவது உறுதி.

முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் உயர்ந்துள்ளது.

சிறப்பான பணி செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டால் மட்டுமே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும். வாக்குச்சாவடி முகவர்கள் ஒரு அடையாளமாக திகழ வேண்டும். கட்சிப் பணி என்பது தலையாய கடமை.

பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் தவிடுபொடியாக்கி வெற்றிவாகை சூட முதல்வர் ஸ்டாலினுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.

ஒவ்வொரு பூத் வெற்றி தான் ஒரு தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும். திமுகவின் சாதனையை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.

கட்சி வேறுபாடு இன்றி மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களிடமும் விடு வீடாகச் செல்ல வேண்டும். நீங்கள் சேகரிக்கும் ஒவ்வொரு வாக்கும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும். தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குறுதியை உறுதி செய்யும் பொறுப்பு ஒவ்வொரு வாக்கு சாவடி முகவர்களுக்கும் உள்ளது.

அந்தந்த பகுதியில் அடிப்படை வசதிகளின் கோரிக்கைகளை நிர்வாகிகளுக்கு கொண்டு சென்று அதனை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பணிகளை முடித்து விட வேண்டும். தேர்தலுக்கு முன்னரே அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

2024, 2021 ஆகிய தேர்தல்களில் பெறப்பட்ட வாக்கு வித்தியாசத்தை அதிகப்படுத்த வேண்டும். மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்திற்கு அதிகப்படியான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 234 தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்த அறிவுறுத்தி உள்ளார்.

மாநகராட்சி நகராட்சி, நகரம், பேரூர் கிளை அளவில் ஒரு நாளுக்கு ஒரு வாக்கு சாவடி என்ற அளவில் அனைத்து வாக்காளர்களையும் ஓரிரு நாட்களில் சந்தித்து திமுகவின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 112 வாக்குச்சாவடிகள் வீதம் ஜனவரி 30 வரை பணிகள் முடிக்க வேண்டும்.

தொடர்ந்து 3122 வாக்குச்சாவடிகள் வீடுகள் வாரியாக திமுகவின் சாதனை துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய வேண்டும்.

இதில் கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தில்தமிழ் செல்வன், தொகுதி பார்வையாளர் மகேந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள், பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *