ஐபிஎல் கிரிக்கெட் ; திறமையை பாராட்டி வைபவ் சூர்யவன்ஷிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் – முதல்வர் நிதிஷ் குமார்!!

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 209 ரன்கள் குவித்தது.

பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரரான 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்தில் 7 பவுண்டரி, 11 சிக்சர் விளாசினார். 94 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்கர் மூலமாகவே கிடைத்தன. இவரது ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் 15.5 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

17 பந்தில் அரைசதம் அடித்த சூர்யவன்ஷி, 35 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம், குறைந்த பந்தில் சதம் அடித்த இந்திய வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தார்.

14 வயதில் பயமறியாமல் அதிரடியாக விளையாடிய அவரை கிரிக்கெட் உலகம் பாராட்டி வருகிறது. சூர்யவன்ஷி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், சூர்யவன்ஷியின் திறமையை பாராட்டி 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த வருடம் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது தந்தையை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபாரமான ஆட்டத்திற்குப் பிறகு போன் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

மாநில அரசு அவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும். எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாடி புதிய சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *