கோவை,
கோவை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நம்ம பள்ளி நம்ம ஊரு ஸ்கூல் திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் இல்லாத 5 மாணவிகளுக்கு ரூ.2.66 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் 2024–-2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் உயர் கல்வியில் சேர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பெற்றோரை இழந்த மாணவர்கள், ஏழ்மை நிலையில் உள்ள சுமார் 150க்கும் மேற்பட்ட மாணக்கர்களுக்கு, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளி பொறுப்பு அலுவலர்களாலும், தொண்டு நிறுவனங்களாலும் ரூ.52 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது,
அதனடிப்படையில் நம்ம பள்ளி நம்ம ஊரு ஸ்கூல் திட்டத்தின் கீழ் பெற்றோர்கள இல்லாத 5 மாணவிகளுக்கு ரூ.2.66 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் வழங்கினார்.