நேபாள சிபிஎன்​-​யுஎம்​எல் கட்​சி​யின் தலை​வ​ராக 3-வது முறை​யாக கே.பி.சர்மா ஒலி தேர்வு!!

காத்​மாண்டு:
நேபாள சிபிஎன்​-​யுஎம்​எல் கட்​சி​யின் தலை​வ​ராக 3-வது முறை​யாக கே.பி.சர்மா ஒலி தேர்​வாகி உள்​ளார். நேபாளத்தில் கடந்த செப்​டம்​பர் மாதம் அரசுக்கு எதி​ராக மாணவர்​கள் போராட்​டம் தீவிரமடைந்​தது.

இதையடுத்​து, சிபிஎன்​-​யுஎம்​எல் கட்​சித் தலை​வரும் பிரதமரு​மான கே.பி.சர்மா ஒலி தலை​மையி​லான அரசு செப்​டம்​பர் 9-ம் தேதி கவிழ்ந்​தது.

இப்​போது முன்​னாள் தலைமை நீதிபதி சுஷிலா கர்கி தற்​காலிக பிரதம​ராக பொறுப்பு வகிக்​கிறார். இதையடுத்​து, சிபிஎன்​-​யுஎம்​எல் கட்​சி​யின் தலை​வரை மாற்ற வேண்​டும் என்ற கோரிக்கை அக்​கட்​சி​யில் நில​வியது.

இந்​நிலை​யில், நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் சிபிஎன்​-​யுஎம்​எல் கட்​சி​யின் 11-வது பொதுக்​குழு கூட்​டம் கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை நடை​பெற்​றது.

இதில் கட்​சித் தலை​வர் மற்​றும் நிர்​வாகி​கள் தேர்​தல் நடை​பெற்​றது. கட்​சி​யின் 2,260 பொதுக் குழு உறுப்​பினர்​கள் வாக்​களிக்க தகுதி பெற்​றிருந்​தனர்.

இந்​தத் தேர்​தலில் இப்​போதைய தலை​வர் கே.பி.சர்மா ஒலி, 1,663 வாக்​கு​கள் பெற்று 3-வது முறை​யாக தலை​வ​ராக தேர்ந்தெடுக்கப்பட்​டுள்​ளார்.

இவரை எதிர்த்து போட்​டி​யிட்ட கட்​சியின் மூத்த துணைத் தலை​வர் ஈஷ்வர் போக்​ரெல் 584 வாக்​கு​கள் மட்​டுமே பெற்​றார்.

கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ராக சங்​கர் பொகாரே 2-வது முறையாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார். ஒலி​யின் ஆதர​வாள​ரான இவரை எதிர்த்து போட்​டி​யிட்ட முன்​னாள் நிதி​யமைச்​சர் சுரேந்திர பாண்டே தோல்வி அடைந்​தார்.

இது​போல, தேர்ந்தெடுக்கப்​பட்ட 19 நிர்வாகிகளில் 17 பேர் ஒலியின் ஆதரவாளர்கள் ஆவர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *