நடிகர் ரஜினிகாந்த், தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து தங்க செயின் பரிசளித்தார்!!

சென்னை:
சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் பத்மா என்ற தூய்மையாளர் கடந்த 11-ந்தேதி தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது குப்பையோடு கிடந்த கவர் ஒன்றில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்தார். இதை அடுத்து அந்த தங்க நகைகளை பாண்டிபஜார் காவல்நிலையில் ஒப்படைத்தார்.

ஏழ்மையான சூழலிலும் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பத்மாவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் பல்வேறு தரப்பினரும் பத்மாவை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பத்மாவை நேரில் அழைத்து பாராட்டினார். பத்மாவின் செயலை பாராட்டிய ரஜினிகாந்த் அவருக்கு பொன்னாடை போர்த்தி தங்க செயினை பரிசாக அளித்தார்.

மேலும் பத்மாவுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *