ஜனநாயகன் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்கிறது; விஜய்யை மிரட்டும் வகையில் இது நடைபெறுகிறதா என்றால், பதில் விஜய்யின் மனதில் தான் உள்ளது – பிரேமலதா!!

சென்னை,
தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. கடலூர் மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பதாக சொன்ன பிரேமலதா அன்றைய தினம் சஸ்பென்ஸ் வைத்துவிட்டு சென்றார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கூறியதவாது:

சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.யாரும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை. பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

தேமுதிக எங்களின் குழந்தை.. அதனால் ஒரு அம்மாவாக தேமுதிகவுக்கு என்ன செய்ய வேண்டுமென நன்றாக தெரியும்.. உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுத்து கூட்டணியை அமைப்போம். எந்த ரகசியமும் கிடையாது.

இம்முறை வெளிப்படையாகவே கூட்டணி பேச்சுவார்த்தையை செய்கிறோம். என்டிஏ கூட்டணி உட்பட இன்னும் எந்த கூட்டணியும் முழு வடிவம் பெறவில்லை.

அங்கும் இன்னும் சில கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம்.

நல்லதே நடக்கும்” அதேபோல விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரம் குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ஜனநாயகன் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்கிறது; விஜய்யை மிரட்டும் வகையில் இது நடைபெறுகிறதா என்றால், பதில் விஜய்யின் மனதில் தான் உள்ளது” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *