துபாயில் இருந்து சென்னை வந்தடைந்தார் அஜித்!!

சென்னை:

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதனிடையே ஈரானும் நேற்றுமுதல் இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் கூட்டு நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (துபாய், அபுதாபி) மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

துபாயில் கார் பந்தயத்திற்காகஅஜித் தங்கியிருந்தார். அப்போது துபாயில் தாக்குதல் நடத்தப்பட்டதால் சென்னை திரும்ப முடியாமல் அஜித் துபாயில் சிக்கிக்கொண்டார். அஜித் பாதுகாப்பாக இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், துபாயில் இருந்து அஜித் இன்று பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *