சென்னை:
மின்கட்டண சுமையால் பாதிக்கப்படும் மக்கள் தங்களின் கோபத்தை தேர்தலில் காட்டுவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையால் நடுத்தர மக்கள் அதிக மின்கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகான மின்கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிடும் முறை அமலாகும் என அமைச்சர் கூறியிருந்தார்.
இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைபடுத்த மேலும் 2 ஆண்டு ஆகாலம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோடை காலத்தில் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும். இதனால் ஏற்படும் மின்கட்டண சுமையை ஏற்கும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் கோபத்தை வாக்களிப்பதில் காண்பிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையில் துணைவேந்தர் கே.நாராயணசாமி கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் டீன் சாந்தாராமன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் மதிவாணன், எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனையில் இயக்குநர் சுமதி, கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் இயக்குநர் மகாலட்சுமி, அரசு மனநல காப்பக இயக்குநர் மலையப்பன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர்.
ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் ஹரிஹரன், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் டீன் அரவிந்த், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் கவிதா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
மருத்துவமனைகளில் நடந்த குடியரசு தின விழாவில், சிறப்பான சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. கவிதை, கட்டுரை, விநாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.