காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை !! சூலூர் போலீசார் வழக்குப்பதிவு!!

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இரவு 10.30 மணிக்கு மேல் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொள்வதாகக் கூறி, பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் வருகிறார். இன்று சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணி அளவில் சிந்தாமணி புதூரில் இருந்து ஒண்டிப்புதூர் வரும் வழியில் அவருடன் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

இரவு 10 மணியுடன் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி இல்லை என்ற நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் மேற்கொண்டதால் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக”வினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் மேற்கொண்டு செல்வதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், வேனில் இருந்து இறங்கி வந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சட்டத்தை மீறி இரவு நேரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என காவல் துறையினர் உறுதியாக தெரிவித்தனர்.

அவர்களுடன் வாக்குவாதம் மேற்கொண்ட அண்ணாமலை, தான் பிரச்சாரம் செய்யவில்லை என்றும், கையெடுத்து கும்பிட்டபடிதான் வந்ததாக தெரிவித்தார். ஆனால் கட்சியினர் அனுமதி மறுக்கவே பாஜக”வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஒண்டிபுதூர் சாலையில் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் செயல்பட்டது.சிறிது நேரத்திற்கு பின்பு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக இரவு நேரத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனிடையே, சூலூர் போலீசார் அண்ணாமலை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *