சென்னை:
ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ் சார்பில் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 09.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை சென்னை மேற்கு மாம்பலம், கல்பவிருக்ஷா சேவா மையத்தில் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பான அறிக்கையில், “இது முற்றிலும் இலவசமாக சேவை. அனுபவம் வாய்ந்த கண் பராமரிப்பு நிபுணர்களால் நடத்தப்படவுள்ளது. சீரான மற்றும் வசதியான சேவையை உறுதி செய்ய முன் பதிவு கட்டாயமாகும்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் மூத்த குடிமக்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பிப்ர.4ம் அன்று அல்லது அதற்கு முன் 97104 85295 என்ற எண்ணைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது 7575india@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ பதிவு செய்துகொள்ளலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.