மேஷம்
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். இல்லத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
ரிஷபம்
வரவு திருப்தி தரும் நாள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து சேரும்.
மிதுனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் செயல்பாட்டைக் கண்டு வியப்பர்.
கடகம்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பயணங்கள் பலன்தருவதாக அமையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். காரியத்தடை ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நட்பு பகையாகும்.
கன்னி
முயற்சி கைகூடும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
துலாம்
ஆரோக்கியம் சீராகும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.
விருச்சிகம்
யோகமான நாள். எதிபாராத வரவு உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நடைபெற்று மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.
தனுசு
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு.
மகரம்
உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் பணியைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
கும்பம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் சம்பந்தமாக அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
மீனம்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.