ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு!!

சென்னை:
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

’லால் சலாம்’ படத்துக்குப் பிறகு அடுத்த படத்துக்கான பணிகளை கவனித்து வந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இதன் படக்குழுவினர் யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படத்தினை கண்ணன் ரவி தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய படத்தின் இசையமைப்பாளராக யுவன் பணிபுரியவுள்ளார்.

இதன் இதர தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது. இதன் தலைப்புடன் கூடிய தமிழ் டீஸரை இயக்குநர் மணிரத்னம் மாலையில் வெளியிடவுள்ளார். இதன் தெலுங்கு டீஸரை சுகுமார் வெளியிடவுள்ளார்.

இன்று மாலையில் வெளியாகவுள்ள டீஸரின் மூலம், நாயகன் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி, இந்தாண்டுக்குள் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *