ஓ.பன்​னீர்​செல்​வம் வீட்​டின் இரும்​புக் கதவில் பொருத்​தப்​பட்​டிருந்த ஜெயலலிதா உரு​வப்​படம், இரட்டை இலை சின்​னம் ஆகியவை இயந்​திரம் மூலம் வெட்டி அகற்றம்!!

பெரியகுளம்: ​
முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் திமுக​வில் இணைந்​ததைத் தொடர்ந்து பெரியகுளத்​தில் உள்ள அவரது வீட்​டின் இரும்​புக் கதவில் பொருத்​தப்​பட்​டிருந்த ஜெயலலிதா உரு​வப்​படம், இரட்டை இலை சின்​னம் ஆகியவை இயந்​திரம் மூலம் வெட்டி அகற்​றப்​பட்​டன.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர் ​செல்​வம், கடந்த 27-ம் தேதி தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். பின்​னர் முதல்​வர் ஸ்டா​லினை சந்​தித்து திமுக​வில் தன்னை இணைத்​துக் கொண்​டார்.

அவருடன் அவரது மகனும் முன்​னாள் எம்​.பி.​யு​மான ரவீந்​திர​நாத், உசிலம்​பட்டி எம்​எல்ஏ ஐயப்​பன் உள்​ளிட்ட ஆதர​வாளர்​களும் திமுக​வில் இணைந்தனர்.

இதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்​டிலும் பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. முகப்பு இரும்​புக் கதவில் பொருத்​தப்​பட்டு இருந்த ஜெயலலி​தா​ படம், இரட்டை இலைச் சின்​னம் உள்​ளிட்​டவை வெட்டி எடுக்​கப்​பட்​டன.

வீட்​டின் முகப்பில் கருப்​பு, சிவப்​பு, வெள்ளை வண்​ண​மும் மாற்​றப்​பட்​டது. திமுக​வில் இணைந்த பிறகு முதல்​முறை​யாக நேற்று மாலை தனது சொந்த மாவட்​டத்​துக்கு ஓ.பன்​னீர்​செல்​வம் வந்​தார்.

அவருக்கு மாவட்ட எல்​லை​யான ஆண்​டிபட்டி கணவாய், ஆண்​டிபட்​டி, க.விலக்​கு, தேனி, போடி உள்​ளிட்ட பல பகு​தி​களி​லும் மேள​தாளம்​ முழங்​க வரவேற்​பு அளிக்​கப்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *