புருஷன்’ படப்பிடிப்பு மும்முரம்: ஜூனியில் வெளியிட படக்குழு முடிவு !!

சென்னை:
‘புருஷன்’ படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. ஜூனியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் சுந்தர்.சி. அதனைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் ‘புருஷன்’ படத்தினை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் படுவேகமாக நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடித்து, ஜூனியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

விஷால் நடிப்பில் உருவாகும் குறுகியகால படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்தளவுக்கு ஒரு புறம் படப்பிடிப்பு, இன்னொரு புறம் இறுதிகட்டப் பணிகள் என மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வருகிறார்கள்.

தற்போதைய சூழலைப் பார்த்தால் சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாகும் ‘புருஷன்’ படமே முதலில் வெளியாகும் என தெரிகிறது. ஏனென்றால் விஷால் இயக்கி வரும் ‘மகுடம்’ மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய படங்களின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தாலும், முதலில் ‘புருஷன்’ படமே வெளியாகும் என்கிறார்கள் திரையுலகினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *