சென்னை:
பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்டிஆர், ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார். இப்போது பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பெங்களூரு மகாதேவபுராவில் கட்டப்பட்டுள்ள கிம்ஸ் மருத்துவமனையைத் திறந்துவைக்க ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
அவரைப்பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அவர்கள் மருத்துவமனைக்குள்ளும் புகுந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாதுகாவலர்கள், அவர்களிடம் இருந்து ஜூனியர் என்டிஆரை மீட்டு அழைத்துச் சென்றனர். ரசிகர்களைக் கட்டுப் படுத்த போலீஸார் முயன்றனர்.
எல்லை மீறிப் போனதால் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். ரசிகர்கள் கூட்டத்தால் மருத்துவமனையின் எஸ்கலேட்டர் சேதமடைந்தது.